Skip to main content
கற்பனைக்கு எட்டாத தொகை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கற்பனைக்கு எட்டாத தொகை - இலோன் மஸ்க்கின் 1 டிரில்லியன் டாலர் சம்பளம் என்றால் என்ன?

வாசிப்புநேரம் -
கற்பனைக்கு எட்டாத தொகை - இலோன் மஸ்க்கின்  1 டிரில்லியன் டாலர் சம்பளம் என்றால் என்ன?

(படம்: Pixabay)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகின் பெருஞ்செல்வந்தர்களில் ஒருவர் Tesla தலைமை நிர்வாக அதிகாரி இலோன் மஸ்க் (Elon Musk).

மஸ்க்கின் சம்பளம் இனி 1 டிரில்லியன் டாலருக்கு (சுமார் 1.3 டிரில்லியன் வெள்ளி) உயரவிருக்கிறது.

வரலாற்றில் ஆக அதிகச் சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பெருமையை அவர் பெறவிருக்கிறார்.

1 டிரில்லியன் டாலர் என்றால் எவ்வளவு? அதன் மதிப்புதான் என்ன?

தகவல்களைத் திரட்டியது "செய்தி".

1 டிரில்லியன் டாலர் என்றால் எவ்வளவு?

எண்களில்: 1, 000, 000, 000, 000

நீங்கள் ஒவ்வொரு வினாடிக்கும் ஒவ்வோர் எண்ணை 1,2,3 என்று எண்ணினால், 31,688 ஆண்டுகள் கழித்தும் எண்ணிக் கொண்டிருக்கவேண்டும்.

அவ்வளவு பெரிய தொகை அது!

1 டிரில்லியன் டாலருக்கு என்ன வாங்கலாம்?

128 GB கொண்ட iPhone 15
ஒன்றின் விலை: 799 டாலர்


இதுபோன்று 1.25 பில்லியன் iPhoneகளை வாங்கலாம்.

பூமியில் ஆறு பேரில் ஒருவருக்கு வழங்குவதற்கு இது போதுமானது.

அதாவது ஒட்டுமொத்த பூமியில் கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தது ஒரு 128 GB கொண்ட iPhone 15 கைத்தொலைபேசியைக் கொடுப்பதற்குச் சமம்.

Tesla Model 3 ரகக் கார்
ஒன்றின் விலை: 38,630 டாலர்


இது போன்று 25.9 மில்லியன் கார்களை வாங்கலாம்.

இது ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகையை மிஞ்சிவிட்ட எண்ணிக்கை.

புதிய அமெரிக்க வீடுகள்
சராசரி விலை: 413,500 டாலர்


இந்த விலையிலுள்ள 2.4 மில்லியன் வீடுகளை வாங்கலாம்.

2.4 மில்லியன் வீடுகள் என்பது சிங்கப்பூரிலுள்ள மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கையைப்போல் மூன்று மடங்கு.

சிங்கப்பூரில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு புதிய வீட்டைக் கொடுத்த பிறகும் அது போன்று இன்னும் இரண்டு முறை கொடுக்கும் அளவுக்கு வீடுகள் எஞ்சியிருக்கும்.

ஆண்டுக்கு 1 டிரில்லியன் டாலர் அல்லது அதற்கும் மேல் மொத்த உள்நாட்டு உற்பத்திகொண்ட நாடுகள் எவை? 

உலகில் இப்போதைக்கு 19 நாடுகள் மட்டுமே 1 டிரில்லியன் டாலர் அல்லது அதற்குமேல் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டுள்ளன.

அவற்றில் முதல் 5 நாடுகள்:

📍அமெரிக்கா - 30.5 டிரில்லியன் டாலர்

📍சீனா - 19.2 டிரில்லியன் டாலர்

📍ஜெர்மனி - 4.7 டிரில்லியன் டாலர்

📍இந்தியா - 4.2 டிரில்லியன் டாலர்

📍ஜப்பான் - 4.2 டிரில்லியன் டாலர்

எஞ்சியிருக்கும் அதாவது சுமார் 170 நாடுகள் 1 டிரில்லியன் டாலருக்கும் குறைவான
மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டுள்ளன.

அவற்றில் சில:

📍சுவிட்சர்லந்து - 942 பில்லியன் டாலர்

📍போலந்து - 915 பில்லியன் டாலர்

📍சிங்கப்பூர் - 547 பில்லியன் டாலர்

📍நைஜீரியா - 285 பில்லியன் டாலர்

📍நியூசிலந்து - 263 பில்லியன் டாலர்

குறிப்பு: மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது ஒரு நாடு ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யும் அனைத்துப் பொருள், சேவைகளின் மொத்தப் பண மதிப்பைக் குறிக்கிறது.

சுருங்கக்கூறினால் ஒரு டிரில்லியன் டாலர் என்பது வெறும் தொகையல்ல;

உலகின் பெரும்பாலான நாடுகளின் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகம்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்