Skip to main content
எடையைக் குறைக்கும் மருந்துகளை எவ்வாறு பயன்படுத்தலாம்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

எடையைக் குறைக்கும் மருந்துகளை எவ்வாறு பயன்படுத்தலாம்?

வாசிப்புநேரம் -
உலகச் சுகாதார நிறுவனம் உடல் எடையைக் குறைக்கும் மருந்துகளின் பயன்பாட்டுக்குப் புதிய வழிகாட்டியை வெளியிட்டுள்ளது.

உடல் பருமனைச் சமாளிப்பதற்கான நீண்டகாலச் சிகிச்சைக்காக GLP-1 பிரிவு மருந்துகள் பயன்படுத்தப்படலாம் என்று அது கூறுகிறது.

GLP-1 மருந்துகளைப் பொதுவாக நீரிழிவு நோயால் அவதிப்படுவோர் பயன்படுத்துகிறார்கள். அது ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க உதவுவதாக நம்பப்படுகிறது. ஊசி மூலம் மருந்து செலுத்தப்படுகிறது.

எடையைக் குறைக்க நினைப்பவர்கள் ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறியது.

உணவு, உடற்பயிற்சியோடு மருந்தும் கைகொடுக்கலாம் என்று சொல்வது உலகச் சுகாதார நிறுவனத்தின் கொள்கையில் பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது.

இதற்குமுன் உடல்பருமனைக் குறைப்பதற்கு வாழ்க்கைமுறை, கட்டுப்பாடான உணவு, உடற்பயிற்சி ஆகியவை மட்டுமே பரிந்துரைக்கப்பட்டன.

எதுவானாலும் மருத்துவரின் ஆலோசனையோடு செயல்படுவது முக்கியம்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்