ஈரான் போர் - சிங்கப்பூரை எப்படிப் பாதிக்கும்?
வாசிப்புநேரம் -
மோசமடையும் ஈரான் போரால் அனைத்துலக எரிசக்தி விநியோகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Coface காப்புறுதி நிறுவனத்தின் ஆசிய பசிபிக் வட்டாரத்திற்கான மூத்த பொருளாதார வல்லுநர் பெர்னார்ட் ஆவ் (Bernard Aw) அது பற்றிய தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
சில எண்ணெய், எரிவாயுக் கப்பல்கள் செயல்படுவதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன அல்லது மெதுவாகச் செயல்படுகின்றன.
உயரும் காப்புறுதிச் செலவுகள், பாதுகாப்புச் சிக்கல்கள் ஆகியவை அதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
போர் நடக்கும் வட்டாரத்தில் இருக்கும் கப்பல்களுக்குச் சில காப்புறுதி நிறுவனங்கள் போரிலிருந்து பாதுகாப்புத் தரும் அம்சத்தை அகற்றியுள்ளன.
அதனால் நூற்றுக்கும் அதிகமான கப்பல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
உலகின் 20% எண்ணெய், இயற்கை எரிவாயு (LNG) ஹொர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்கிறது.
தற்போது அங்கு கப்பல் போக்குவரத்து குறைந்துள்ளதால், எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
உலகப் பொருளாதாரத்தில் அது ஏற்படுத்தப்போகும் முக்கிய மாற்றங்கள் யாவை?
போக்குவரத்து முதல் எரிசக்தி உற்பத்தி வரை...
உயரும் எண்ணெய், எரிவாயு விலைகளால் உலகின் பல பொருளாதாரங்கள் பாதிக்கப்படலாம் என்றார் திரு ஆவ்.
எரிசக்திச் சந்தை நிலையில்லாமல் இருக்கும்போது நிறுவனங்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள விநியோகத்தைத் தாமதப்படுத்தலாம்.
அவை எல்லாம் செலவுகளைக் கூட்டும்.
அது பிறகு வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் விலையாக மாறும்.
பெரும்பாலான பொருளாதாரங்களில் எண்ணெய் முக்கியப் பங்கு வகிக்கிறது.
எண்ணெய் விலை உயர்வு பணவீக்கத்திற்கு இட்டுச்செல்லலாம்.
சிங்கப்பூருக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
சிங்கப்பூர் தனது எரிசக்தித் தேவைகளுக்கு இறக்குமதியைக் கிட்டத்தட்ட முழுமையாக நம்பியிருப்பதால் நேரடிப் பாதிப்புகள் ஏற்படும்.
எரிவாயு விலை உயர்வால், வரும் மாதங்களில் வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் உயர வாய்ப்புள்ளது என்றார் திரு ஆவ்.
போக்குவரத்தில் பெட்ரோல் விலை உயர்வு உடனடியாகப் பிரதிபலிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
இது விநியோகக் கட்டணங்கள், உணவுப் பொருள் விலைகள், பயணச் செலவுகளை உயர்த்தலாம்.
2025-ல் சிங்கப்பூரின் பணவீக்கம் குறைவாகவே இருந்தது.
ஆனால் எரிசக்தி விலை உயர்வு விலைவாசியை மீண்டும் கூட்டலாம்.

ஆதாரம் : CNA