Skip to main content
பாறைகளுக்கு நடுவே சிக்கிய சிறுவன்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பாறைகளுக்கு நடுவே சிக்கிய சிறுவன்

வாசிப்புநேரம் -
பாறைகளுக்கு நடுவே சிக்கிய சிறுவன்

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இரண்டு பாறைகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட 12 வயதுச் சிறுவன்...

அவரைக் காப்பாற்றத் தங்கள் உடல்களை வைத்து ஆற்று நீரின் நீரோட்டைத் தடுத்த சுற்றுப்பயணிகள்.

அந்தச் சம்பவம் சீனாவின் குய்சோவ் (Guizhou) மாநிலத்தில் சென்ற மாதம் 24ஆம் தேதி நடந்தது.

சிறுவன் ஆற்றின் அருகே விளையாடிக்கொண்டிருந்தான்.

திடீரென்று பெருக்கெடுத்த ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட அவன், இரு பாறைகளுக்கு நடுவே மாட்டிக்கொண்டான்.

உதவி கேட்டு சிறுவன் அலற அருகிலிருந்த சுற்றுப்பயணிகள் அங்கு விரைந்தனர்.

உடனே அவர்களில் சில ஆடவர்கள் தங்கள் உடல்களைக் கொண்டு ஆற்றின் நீரோட்டத்தை முடிந்தளவு தடுத்தனர்.

கயிற்றைக் கொண்டு சிறுவனை வெளியேற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

மழை வரும் அறிகுறி தென்பட்டதால் ஆற்றில் நீர்மட்டம் உயரும் என்ற அச்சமும் நிலவியது.

பிறகு பொதுமக்களில் ஒருவர் ஆற்றில் இறங்கிச் சிறுவனைப் பாறைகளிலிருந்து வெளியேற்ற முயன்றார்.

அவரது முயற்சி கைகூடியது.

அதன் பின்னர் அருகிலிருந்த மற்றுமொருவர் சிறுவனை உடனடியாகப் பிடித்து ஆற்றிலிருந்து வெளியே தூக்கிச் சென்றார்.

20 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு சிறுவன் காப்பாற்றப்பட்டான்.

இணையவாசிகள் அகம் மகிழ்ந்தனர்.

சிறுவனைக் காப்பாற்றியவர்களின் வீரதீரச் செயலை இணையவாசிகள் பெரிதும் பாராட்டினர்.

தன்னலமின்றிச் சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய அவர்களுக்குப் பலரும் சமூக ஊடகங்களில் நன்றி தெரிவித்தனர்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்