Skip to main content
ஆப்கானிஸ்தானில் வலுவான நிலநடுக்கம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஆப்கானிஸ்தானில் வலுவான நிலநடுக்கம் - 100க்கும் அதிகமானோர் மாண்டனர்

வாசிப்புநேரம் -
ஆப்கானிஸ்தானில் வலுவான நிலநடுக்கம் - 100க்கும் அதிகமானோர் மாண்டனர்

(படம்: Mohsen KARIMI / AFP)

வெளியீடு : 08 Oct 2023 07:53AM புதுப்பிப்பு : 08 Oct 2023 12:00PM

ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியை வலுவான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. நூற்றுக்கணக்கானோர் மாண்டு போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சுமார் 1,000 பேர் காயமடைந்தனர். ஈரான் எல்லையை ஒட்டிய ஹேராத் (Herat) நகரில் 6.3 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது.

பல கட்டடங்கள் சேதமடைந்தன. இடிபாடுகளுக்கு இடையே பலர் சிக்கியுள்ளனர். நிலநடுக்கத்துக்குப் பிறகு 3 முறை வலுவான அதிர்வுகள் ஏற்பட்டன.

முன்னதாக, 15 பேர் மாண்டதாகத் தகவல் வெளியானது. பெருமளவு சேதம் ஏற்பட்டிருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அவசரச் சேவைப் பிரிவினர் கூறினர்.

300க்கும் அதிகமானோர் மாண்டதாக
அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்