Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பாகிஸ்தானில் அமெரிக்க துணைத் தூதரகத்தைத் தாக்கிய ஈரான் ஆதரவாளர்கள்

வாசிப்புநேரம் -
பாகிஸ்தானின் கராச்சி (Karachi) நகரில் நூற்றுக்கணக்கான ஈரான் ஆதரவாளர்கள் அமெரிக்கத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டுத் தாக்கியதாக AFP ஊடகம் கூறுகிறது.

தூதரகத்தின் பிரதான வாயிலைக் கடந்து கூட்டமாகச் சென்ற இளையர்கள் வளாகத்துக்குள் நுழைந்து சன்னல்களை உடைத்தனர்.

காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

இளையர்களைக் கலைக்கக் காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியது.

"ஒன்றுபட்டிருக்க வேண்டும். எந்தச் சக்தியும் நம்மைத் தடுக்க முடியாது" என்று ஓர் இளையர் சொல்வதைக் கேட்க முடிந்ததாக AFP தெரிவித்தது.

ஈரானின் உச்சத் தலைவரின் கொலைக்குப் பழிவாங்கத் தூதரகத்தைத் தீயிட்டுக் கொளுத்தப்போவதாக மற்றோர் ஆர்ப்பாட்டக்காரர் கூறியிருக்கிறார்.

லாகூர் (Lahore) உள்ளிட்ட மற்ற சில இடங்களிலும் ஈரான் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்வதாகத் தெரிகிறது.
 
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்