Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கையில் கிடைப்பது, காலுக்கடியில் கிடப்பது - அனைத்தின் உதவியுடன் ஹங்கேரியில் கட்டப்படும் மண்வீடுகள்

வாசிப்புநேரம் -
கையில் கிடைப்பது, காலுக்கடியில் கிடப்பது - அனைத்தின் உதவியுடன் ஹங்கேரியில் கட்டப்படும் மண்வீடுகள்

ATTILA KISBENEDEK / AFP

ஒரு காலத்தில் ஏழ்மையின் சின்னமாகக் கருதப்பட்ட மண்வீடுகள் இப்போது ஹங்கேரியில் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. 

மண்வீடுகளை வடிவமைத்துக் கட்டும் நிபுணர் ஜானோஸ் காஸ்பர் (Janos Gaspar) இதுவரை 200க்கும் மேற்பட்ட மண்வீடுகளைக் கட்டியிருப்பதாக APF செய்தி நிறுவனத்திடம் சொன்னார். 

அடுத்த மூன்றாண்டுகள் வரை மண்வீடு கட்டுவதற்காக மக்கள் அவரை நாடியிருப்பதாகச் சொன்னார் காஸ்பர். 

மண்வீடுகளைக் கட்டுவதற்கு இயற்கைப் பொருள்கள் மட்டுமே போதும் என்கிறார் காஸ்பர். அத்தகைய வீடுகள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் என்பதை அவர் சுட்டினார். 

கையில் கிடைப்பது, காலுக்கடியில் கிடப்பது - அனைத்தின் உதவியுடன் ஹங்கேரிய மக்களுக்கு வீடுகளைக் கட்டத் தெரிந்திருக்கிறது என்று குறிப்பிட்டார் இன்னொரு மண்வீட்டு வடிவமைப்பாளர். 

மண்ணால் ஆன சுவர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குத் தாக்குப்பிடிக்கக்கூடியவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்