உலகம் trending
$900 வாடகை கொடுத்தும் தூக்கத்தைத் தொலைத்த பெண்
This audio is generated by an AI tool.
ஹைதராபாத்தில் மாதம் 66,000 ரூபாய் (900 வெள்ளி) வாடகை செலுத்தி குடியேறிய வீட்டில் கொசுத் தொல்லையால் தூக்கத்தைத் தொலைத்துவிட்டதாகப் பெண் ஒருவர் காணொளி பதிவிட்டுள்ளார். அந்தக் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியிருக்கிறது. அச்சல் பாமரே (Achal Bhamare) நள்ளிரவு ஒன்றரை மணிக்கு எடுத்த காணொளியை தனது Instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது காதருகில் கொசுக்கள் சத்தம் போட்டதால் தூக்கம் கலைந்து எழுந்ததாக அவர் ஆதங்கத்தைக் கொட்டுகிறார். பின்னர் மின்னியல் கருவி (Electric Racket) மூலம் தாம் அடித்துக்கொன்ற கொசுக்கள் படுக்கையில் கொட்டிக்கிடப்பதைக் காட்டுகிறார். தமது வீட்டில் மட்டும்தான் இப்படியா? அல்லது ஹைதராபாத் நகரம் முழுவதும் உள்ள பிரச்சினையா? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். காணொளியைப் பார்த்த இணையவாசிகள் தாங்களும் இதே பிரச்சினையை அனுபவிப்பதாகக் கூறியுள்ளனர். "இப்போது கொசுக்களைக் கொல்வது எனக்கு ஒரு பொழுதுபோக்காகவே மாறிவிட்டது,” என்று ஒருவர் தமது வேதனையை வேடிக்கையாகச் சொல்லியிருக்கிறார். மற்றொருவர் அந்த வீட்டைக் காலி செய்து அங்கிருந்து வெளியேறுமாறு பெண்ணுக்கு அறிவுரை கூறியுள்ளார்.