இசை நிகழ்ச்சியின்போது மயங்கி விழுந்த K-pop பாடகி
வாசிப்புநேரம் -
மக்காவ்வில் (Macau) நடைபெற்ற Waterbomb இசை நிகழ்ச்சியின்போது பிரபல K-pop கலைஞர் ஹியூனா (Hyuna) மயங்கி விழுந்தார்.
சம்பவம் நேற்று (நவம்பர் 9) நடந்தது. அவரை மேடையிலிருந்து உடனே பாதுகாவலர்கள் தூக்கிச் சென்றனர்.
சம்பவத்தைப் பற்றி ஹியூனா Instagram தளத்தில் பதிவிட்டார்.
தற்போது குணமடைந்திருக்கும் ஹியூனா சம்பவத்துக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியை நிறைவேற்றாமல் ரசிகர்களை ஏமாற்றிவிட்டதுபோல் உணர்வதாக அவர் பதிவிட்டிருந்தார்.
எதிர்காலத்தில் உடலுரத்தை வலுப்படுத்த அவர் உறுதியளித்தார்.
ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்ட அவர் தம்மைப் பற்றிக் கவலைப்படவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் மயங்கிவிழுந்த காரணம் தெரியவில்லை.
ஆனால் அண்மையில் ஹியூனா தீவிரமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கியதன் விளைவாக அது இருக்கும் என்று ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர்.
அக்டோபர் 3ஆம் தேதி அவர் புதிய தீவிர உணவுப் பழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கியதாக Instagram தளத்தில் அறிவித்தார். ஒரு மாதத்தில் 10 கிலோகிராம் எடையை இழந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
இதற்கு முன்னரும் அவர் இவ்வாறு மயங்கி விழுந்திருப்பதாக The Korea Times ஊடகம் தெரிவித்தது.

ஆதாரம் : CNA