"இது தான் கடைசி முயற்சி என்று தெரிந்தது" பயணிகளைக் காப்பாற்றிய flydubai விமானி
வாசிப்புநேரம் -
(படம்: Israel Foreign Ministry/Handout via REUTERS)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
"உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடினேன். ஆனால் பயணிகளை சாக விட முடியாது என்று எனக்குத் தோன்றியது.”
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய விமானி ஸ்மித் மச்சர் (Smit Machchhar), இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இவ்வாறு கூறியுள்ளார்.
துபாயிலிருந்து டெல் அவிவ் (Tel Aviv) சென்ற விமானத்தில் புதன்கிழமை நடந்த சம்பவத்தில் மச்சர் பலத்த காயமடைந்தார்.
மச்சரைத் தொலைபேசியில் இன்று தொடர்புகொண்ட திரு மோடி, சம்பவம் குறித்துக் கேட்டறிந்தார்.
பலத்த காயங்களால் கீழே விழுந்தபோது, விமானம் வேகமாகத் கீழே இறங்குவதை உணர்ந்ததாக மச்சர் கூறினார்.
“பலமுறை தாக்கினார், நிலைகுலைந்தேன். ஆனால் இதுதான் கடைசி முயற்சி என்று எனக்குத் தெரிந்தது. கதவு அருகில்தான் இருந்தது. தாக்கும்போதே கதவைத் திறந்தேன். அனைவரும் உள்ளே வந்தனர்,” என்றார் அவர்.
17 ஆண்டுகால விமானப் பணி அனுபவம், ஆபத்தை உணர உதவியதாகவும் மச்சர் கூறினார். அதில் 11 ஆண்டுகள் அவர் தலைமை விமானியாகப் பணியாற்றியுள்ளார்.
flydubai நிறுவனத்தின் அந்த போயிங் 737 ரக விமானத்தில் 174 பயணிகள் இருந்தனர்.
இணை விமானி மச்சரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
விமானம் ஒரு நிமிடத்தில் சுமார் 17,000 அடி கீழே இறங்கியதாக Flightradar24 இணையத்தளம் தெரிவித்தது.
தாக்குதல் நடத்தியவர் கட்டுப்படுத்தப்பட்டார். பயணிகளின் உதவியுடன் விமானம் சவுதி அரேபியாவுக்குத் திருப்பப்பட்டது, அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
மச்சரின் செயல் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி, பெரும் துயரத்தைத் தவிர்த்ததாகத் திரு மோடி பாராட்டினார்.
சம்பவம் குறித்து விசாரணை நடக்கிறது.

ஆதாரம் : AFP