Skip to main content
பிலிப்பீன்ஸ் முன்னாள் அதிபர் டுட்டார்ட்டே தடுப்புக்காவலில்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பிலிப்பீன்ஸ் முன்னாள் அதிபர் டுட்டார்ட்டே தடுப்புக்காவலில்

வாசிப்புநேரம் -
பிலிப்பீன்ஸ் முன்னாள் அதிபர் டுட்டார்ட்டே தடுப்புக்காவலில்

படம்: REUTERS/Wolfgang Rattay

பிலிப்பீன்ஸின் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டார்ட்டே (Rodrigo Duterte) அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தலைநகர் மணிலாவில் கைதான அவர் நெதர்லந்தில் உள்ள ஹெக் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

முன்னாள் அதிபர் டுட்டார்ட்டே காவல்துறை அதிகாரிகளிடம் சரணடைந்ததாக அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்தது.

79 வயது திரு டுட்டார்ட்டே நேற்று (12 மார்ச்) ஹெக் நகருக்குத் தனிப்பட்ட விமானத்தில் கொண்டுசெல்லப்பட்டார்.

அவரது ஆட்சியின்போது போதைப் பொருளுக்கு எதிரான போரில் ஆயிரக்கணக்கானோர் மடிந்ததன் தொடர்பில் அவர் மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்