Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"உங்கள் செயல் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தால் அதுவே மனநிறைவு" - ஒலிம்பிக் நட்சத்திரம் மெக்ஸ்

வாசிப்புநேரம் -
"உங்கள் செயல் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தால் அதுவே மனநிறைவு" - ஒலிம்பிக் நட்சத்திரம் மெக்ஸ்

(படம்: AFP/Clement Mahoudeau)

ஒலிம்பிக் விளையாட்டுகளில் kitefoiling நீர்சாகச விளையாட்டில் சிங்கப்பூரின் மெக்சிமிலியன் மேடர் (Maximilian Maeder) வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிங்கப்பூரின் ஆக இளம் வீரராக 17 வயது மெக்ஸ் திகழ்கிறார்.

அவரைப் பற்றித் தகவல்கள் 5

1. சிறுவயது முதல் விளையாட்டில் தீவிரம்

சிறுவயதில் மேடர் தமது தந்தையின் சொந்த ஊரான சுவிட்சர்லந்து, அம்மாவின் தாயகமான சிங்கப்பூர் ஆகிய இடங்கள் தவிர்த்து இந்தோனேசியாவின் சுலாவேசித் தீவிலும் வளர்ந்தார்.

நடக்கத் தொடங்கியதும் அவர் நீர்ச்சறுக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்ததாக அவரது தந்தை CNA செய்தியிடம் ஏற்கனவே கூறியிருக்கிறார்.

3 ஆண் பிள்ளைகளில் மூத்தவரான மேடர் மேசைப்பந்து, டென்னிஸ், பேட்மிண்டன் ஆகிய விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்டவர்.

4 வயதில் நீர்ச்சறுக்குப் போட்டி ஒன்றில் தோல்வி கண்டார்.மறுநாள் பயிற்சிக்கு முதல் ஆளாக வந்து நின்றார்.
.
2 ஆண்டுகள் கழித்து அவருக்கு kiteboarding விளையாட்டு அறிமுகமானது. அது பின்னர் kitefoiling விளையாட்டு வரை அவரைக் கொண்டு சென்றது.

2. சுயமாகச் செயல்படப் பழகியவர்

எப்போதும் சுயமாகச் சிந்திக்கவும் முடிவுகள் எடுக்கவும் தாங்கள் மேடருக்குக் கற்றுத் தந்து வந்துள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

"8 வயதுச் சிறுவனாக 3 மீட்டர் அலையில் நீர்ச்சறுக்கில் ஈடுபடும்போது சரியான முடிவுகளை மேடர் எடுக்க வேண்டும் என்பது முக்கியம்" என்பதை நினைவில் கொண்டு அவரைப் பழக்கப்படுத்தியதாக மேடரின் தந்தை திரு வெலன்டீன் சொன்னார்.
 
(படம்: Hwee Keng Maeder)
3. சுவிட்சர்லந்தா? சிங்கப்பூரா? - மேடரின் முடிவு....

சிறு பிள்ளையாக இருந்தபோது சிங்கப்பூர் உணர்வும், உணவும்தான் சொந்தம் என்ற எண்ணத்தைக் கொடுத்ததாக மேடர் இதற்குமுன்னர் CNA செய்தியிடம் கூறியிருக்கிறார்.

சிங்கப்பூரில் தேசியச் சேவையில் பங்கேற்பதன் வாயிலாக நாட்டுக்குச் சிறிய பங்களிப்பைக் கொடுக்க முடியும் என்று மேடர் நம்பினார்.
 
(கோப்புப் படம்: REUTERS/Jeremy Lee)
4. எப்போதும் முதலிடம்

ஒலிம்பிக்கில் kitefoiling விளையாட்டு முதல் முறையாக இந்த ஆண்டுதான் அறிமுகம் கண்டுள்ளது. ஆனால் அதற்குள் மேடர் இந்த விளையாட்டில் பல சாதனைகள் செய்துவிட்டார்.

இரண்டு உலக வெற்றியாளர்ப் பட்டங்கள், ஆசியாவில் தங்கம் எனப் பல பதக்கங்கள் வைத்துள்ள மேடர் உலகின் முதல்நிலை விளையாட்டாளர் என்ற பெருமையைக் கொண்டுள்ளார்.

2024இல் தொடர்ந்து 3ஆவது ஆண்டாக சிங்கப்பூரின் சிறந்த விளையாட்டாளர் விருதும் அவருக்குக் கிடைத்தது.

அவருக்கு மேலும் பெருமை சேர்த்திருக்கிறது ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம்.
(படம்: SportSG/Jeremy Lee)
5. முடிவுகள் முக்கியம்

எல்லாவற்றிலும் வெற்றியடைய வேண்டும் என்பதைவிட அனைத்திலும் சிறந்த முடிவை எடுப்பதுதான் மேடருக்கு முக்கியம்.

"அது உங்கள் பயணத்தைப் பற்றியது. ஒவ்வொரு முறையும் போட்டியிடும்போது அனுபவம் கிடைக்கிறது. திறமையைக் காட்ட முடிகிறது"

"நீங்கள் செய்வது உங்களுக்கு மட்டும் அல்ல ரசிகர்கள், குடும்பம், நாடு எனப் பலருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும்; அதுவே மனநிறைவைத் தரும்" என்பது மேடரின் கருத்து.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்