Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சரக்குப் பற்றாக்குறை குறித்து எச்சரிக்கும் ஆகப்பெரிய அறைகலன் விற்பனை நிறுவனமான Ikea

உலகின் ஆகப்பெரிய அறைகலன் விற்பனை நிறுவனமான Ikea, அனைத்துலக அளவிலான விநியோகத் தொடர் பிரச்சினை குறித்து எச்சரித்துள்ளது.

வாசிப்புநேரம் -
சரக்குப் பற்றாக்குறை குறித்து எச்சரிக்கும் ஆகப்பெரிய அறைகலன் விற்பனை நிறுவனமான Ikea

(படம்: Google Maps)

உலகின் ஆகப்பெரிய அறைகலன் விற்பனை நிறுவனமான Ikea, அனைத்துலக அளவிலான விநியோகத் தொடர் பிரச்சினை குறித்து எச்சரித்துள்ளது.

அதன் சரக்குகளில் நிலவும் பற்றாக்குறை, மேலும் ஓராண்டுக்கு நீடிக்கலாம் என அது தெரிவித்தது.

சீனாவிலிருந்து சரக்குகளைத் தருவிப்பதே மிகப்பெரிய சவால் என Ikea கூறுகிறது.

அதன் பொருள்களில் கிட்டத்தட்ட கால்வாசி, சீனாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

வட அமெரிக்காவில் உள்ள Ikea கடைகள் சரக்குப் பற்றாக்குறையால் ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அதற்கு அடுத்த நிலையில், ஐரோப்பாவில் உள்ள Ikea கடைகளில் சரக்குப் பற்றாக்குறை நிலவுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்