அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் சட்டவிரோத நடமாட்டம் குறைந்துள்ளது
வாசிப்புநேரம் -
(படம்: AFP/VNA Photo)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சட்டவிரோதமாக எல்லையைக் கடப்பது குறைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சட்டவிரோதக் குடியேற்றத்துக்கு எதிராக நடைமுறைப்படுத்திய நிர்வாக நடவடிக்கைகளைத் தொடர்ந்து மாற்றம் நேர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
சென்ற ஆண்டு பிப்ரவரியில் 130,000க்கும் அதிகமானோர் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடிபுகுந்தனர்.
சென்ற மாதம் அந்த எண்ணிக்கை 94 விழுக்காடு குறைந்தது. சுமார் 8,300 பேர் மட்டுமே கடந்தனர்.
அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு அதனைத் தெரிவித்தது.
அமெரிக்காவின் அடைக்கலம் வழங்கும் கட்டமைப்பைத் தற்காலிகமாக நிறுத்தியது, நாடு கடத்தும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியது, தெற்கு எல்லைப் பகுதியில் கூடுதல் துருப்புகளை அனுப்பியது போன்றவற்றால் அது சாத்தியமானதாகக் கூறப்பட்டது.