பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஒரு கண்ணில் கிட்டத்தட்ட பார்வை இழந்தார்
வாசிப்புநேரம் -
(படம்: REUTERS/Mohammad Ismail)
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) கண் சிகிச்சை பெறவிருக்கிறார்.
அவர் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ வளாகத்தில் சிகிச்சை பெறுவார் என்று பாகிஸ்தானின் தகவல் அமைச்சர் X தளத்தில் பதிவிட்டார்.
திரு கானின் கண்பார்வை குறித்து அண்மையில் கவலைகள் எழுந்தன.
அவரை மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
திரு கானின் வலது கண்ணின் பெரும்பகுதியில் அவர் பார்வையை இழந்துவிட்டதாக சென்ற மாதம் தகவல் வெளியானது.
திரு கானின் சிகிச்சை எப்போது, எந்த மருத்துவ வளாகத்தில் மேற்கொள்ளப்படும் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த வாரத் தொடக்கத்தில் திரு கானின் வலது கண் பார்வை ஏறக்குறைய 85 விழுக்காடு குறைந்துவிட்டதாக அவருடைய வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆதாரம் : AP