Skip to main content
பாகிஸ்தானில் இம்ரான் கான் மாநிலம் முடக்கம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பாகிஸ்தானில் இம்ரான் கான் மாநிலம் முடக்கம்

வாசிப்புநேரம் -
பாகிஸ்தானில் இம்ரான் கான் மாநிலம் முடக்கம்

படம்: Abdul MAJEED / AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பாகிஸ்தானில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆளும் மாநிலத்தில் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது கட்சி கைபர் பக்துன்க்வா (Khyber Pakhtunkhwa) மாநிலத்தில் ஆட்சி செய்கிறது.

பிரதமர் ஷெபாஸ் ஷரிஃபின் (Shehbaz Sharif) பரிந்துரையை ஏற்று அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி (Asif Ali Zardari) அந்த மாநிலத்தில் நெருக்கடிநிலைக்கு ஒப்புதல் அளித்தார்.

இஸ்லாமியத் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட மாநில அரசாங்கம் தவறிவிட்டதாகப் பிரதமர் ஷரிஃபின் அலுவலகம் தெரிவித்தது.

நெருக்கடிநிலையின்போது மாநில அரசாங்கத்தின் சில அல்லது அனைத்து நிர்வாகப் பொறுப்புகளையும் மத்திய அரசாங்கம் ஏற்க அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது.

மாநிலம் எவ்வாறு நிர்வகிக்கப்படும் என்பது தெரிவிக்கப்படவில்லை.

திரு இம்ரான் கானை விடுவிக்கக் கோரி அவரது கட்சி தொடர்ந்து பேரணிகளை நடத்திவருகிறது.

வரும் நாள்களில் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கிப் பேரணி நடத்தவும் அது திட்டமிட்டுள்ளது.

மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்தைக் கைப்பற்றிய பாகிஸ்தான் அரசாங்கத்தின் நடவடிக்கையைத் திரு இம்ரான் கானின் கட்சி குறைகூறியது.

இந்த முடிவு மேலும் வன்முறைக்கு வழிவகுக்கும் என்று அது எச்சரித்தது.

பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அரசாங்கம் கைபர் பக்துன்க்வா மாநில அரசாங்கம் மட்டும்தான் என்று அந்தக் கட்சி கூறியது.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்