Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

விமானப் பயணத்தின்போது கால்சட்டையைக் கழற்றியவர் கைது

வாசிப்புநேரம் -

அயர்லந்திலிருந்து அமெரிக்காவுக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் 29 வயது ஷேன் மெக்கினெர்னி (Shane McInerney) என்பவர் தகாத முறையில் நடந்துகொண்ட சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டார். 

அவரை விமான ஊழியர்கள் பல முறை முகக்கவசம் அணியச் சொல்லியும், அவர் அவ்வாறு செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

விமானத்தில் அவர் வீசியெறிந்த காலிக் குளிர்பானக் கலன் ஒன்று,  இன்னொரு பயணியின் தலை மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது.

ஓய்வு நேரத்தில் இருந்த விமானியின் தலையில் ஷேன் அவரது தொப்பியை இரு முறை வைத்ததாகவும் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது. 

இன்னொரு விமான ஊழியருக்கு முன்னால் அவர், கால்சட்டையைக் கழற்றி ஆபாசமாய் நடந்துகொண்டதாகவும் அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. 

அமெரிக்காவை அடையும் வேளையில் அவர் இருக்கையில் அமர்ந்திருக்கவில்லை என்றும் கூறப்பட்டது.  

ஷேன் மீது சாட்டப்படும் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். 

ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்