Skip to main content
ஹாங்காங் தீ
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஹாங்காங் தீ - சுயேட்சை விசாரணைக்கு உத்தரவு

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஹாங்காங் குடியிருப்புக் கட்டடத் தீச்சம்பவம் குறித்து சுயேட்சை விசாரணை மேற்கொள்ளப்படும்.

அதற்கான குழு அமைக்கப்படும் என்று ஹாங்காங் தலைமை நிர்வாகி ஜான் லீயும் (John Lee) கூறினார்.

விசாரணைக் குழுவுக்கு நீதிபதி ஒருவர் தலைமையேற்பார்.

தீச்சம்பவத்துக்கான காரணம், அது எதனால் வேகமாகப் பரவியது உள்ளிட்ட விவகாரங்களைக் குழு ஆராயும்.

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய இந்தச் சுயேட்சை விசாரணை தேவைப்படுவதாகத் திரு ஜான் லீ சொன்னார்.

தீச்சம்பவத்தில் 150 பேர் மாண்டனர். இன்னும் 30 பேரைக் காணவில்லை.

அதன் தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது நோக்கமில்லாக் கொலைக் குற்றச்சாட்டு கொண்டுவரப்படலாம்.

ஊழல் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 12 பேர் கைதாகியுள்ளனர்.

தீச்சம்பவம் பொதுமக்களுக்குச் சினத்தை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று மக்கள் கோரி வருகின்றனர்.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்