முழுமையான சண்டை நிறுத்தம் - இந்தியாவும் பாகிஸ்தானும் உறுதிப்படுத்தின
படம்: AP
This audio is generated by an AI tool.
இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்துக்கு இணங்கியுள்ளதாக Reuters செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
"துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களையும் ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவது தொடர்பில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இன்று இணக்கம் ஏற்பட்டுள்ளது" என்று இந்திய வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர் X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இருநாடுகளும் முழுமையான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் (Ishaq Dar) Geo செய்தியிடம் தெரிவித்தார்.
"இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடிச் சண்டை நிறுத்தத்துக்கு இணங்கியியுள்ளன. வட்டாரத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநிறுத்த பாகிஸ்தான் விரும்புகிறது" என்று பாகிஸ்தான் துணைப் பிரதமருமான திரு டார் சொன்னார்.