Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் பூசல்... வர்த்தக உறவில் என்னென்ன சவால்கள்?

வாசிப்புநேரம் -
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான பூசல் காரணமாக வர்த்தகம் தொடர்பிலான பேச்சுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கனடியச் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய அரசாங்கத்துக்குத் தொடர்பிருக்கலாம் என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றும் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) கூறியிருந்தார்.

இந்தியா அதனை மறுத்துள்ளது.

இரு நாடுகளும் அவரவர் நாட்டிலுள்ள தூதர்களை வெளியேற்றியுள்ளன.

அதனால் இரு நாடுகளும் சந்திக்கக்கூடிய சவால்கள் என்னென்ன?

வர்த்தகப் பேச்சுகள் பாதிப்பு

கனடா இந்தியாவுடன் வர்த்தக உடன்பாட்டைச் செய்துகொள்ளவிருந்தது. தற்போது அந்தப் பேச்சை அது நிறுத்திவைத்துள்ளது.

விரிவான பொருளியல் பங்காளித்துவ உடன்பாட்டின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 6.5 பில்லியன் டாலர் வரை எட்டியிருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம்

2022ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 8 பில்லியன் டாலரை எட்டியது. இந்தியாவிலிருந்து கனடாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் மதிப்பு 4 பில்லியன் டாலர். கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் மதிப்பும் கிட்டத்தட்ட 4 பில்லியன் டாலர்.

முதலீட்டின் தொடர்பில் கனடாவின் பங்கு

கனடா இந்தியாவின் 17ஆவது ஆகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர். 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு 3.6 பில்லியன் டாலருக்கு மேல் முதலீடு குவிய அது காரணமாய் இருந்திருக்கிறது.

கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களின் பங்கு

2018ஆம் ஆண்டு முதல் கனடாவில் படிக்கும் அனைத்துலக மாணவர்களில் இந்திய மாணவர்களின் பங்கு ஆக அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்