பங்களாதேஷ் குடியேறிகளைத் தடுக்க இந்தியாவில் முதலைகளைக் கொண்ட 'உயிருள்ள' வேலி!
This audio is generated by an AI tool.
பங்களாதேஷுடனான எல்லையில் அங்கீகரிக்கப்படாத அத்துமீறல்களைத் தடுக்க பாம்புகள், முதலைகளை விடுவிப்பது குறித்து இந்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
இந்தியா-பங்களாதேஷ் எல்லை 4,000 கிலோமீட்டருக்கும் அதிகமானது.
இமயமலை ஆறுகள் கடலில் கலக்கும் டெல்டா பகுதிகளில் வேலி அமைப்பது கடினமாக உள்ளது.
பாரம்பரிய வேலிகள் அமைக்க முடியாத அல்லது வெள்ள அபாயம் உள்ள ஆற்றுப் பகுதிகளில் முதலைகள் பாம்புகளை ஒரு இயற்கையான தடையாகப் பயன்படுத்த உள்துறை அமைச்சு யோசிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டம் புதுமையானது என்றாலும் இதில் பல சிக்கல்கள் உள்ளன.
ஊர்வனவற்றை எங்கிருந்து பெறுவது?
எல்லையோரக் கிராம மக்களின் பாதுகாப்பு என்னவாகும்?
இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேட ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
2024-ல் பங்களாதேஷில் ஏற்பட்ட ஆர்பாட்டங்கள், முன்னைய பிரதமர் திருவாட்டி ஷேக் ஹசினாவின் வெளியேற்றத்திற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சற்று சுணக்கமடைந்துள்ளது.
திருவாட்டி ஹசினாவின் வீழ்ச்சிக்குப் பிறகு எல்லையில் பங்களாதேஷைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.