Skip to main content
‘கரப்பான்பூச்சி’ தலைவர்கள் விடுதலை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

‘கரப்பான்பூச்சி’ தலைவர்கள் விடுதலை

வாசிப்புநேரம் -
‘கரப்பான்பூச்சி’ தலைவர்கள் விடுதலை

படம்: REUTERS/Priyanshu Singh

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தியாவின் ‘கரப்பான்பூச்சி’ இயக்கத்தைச் சேர்ந்த மூவரை விடுவிக்கப் புது டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்கத்தின் நிறுவனர் அபிஜீத் திப்கே (Abhijeet Dipke), சவுரவ் தாஸ் (Saurav Das), ஆஷுதோஷ் ரங்கா (Ashutosh Ranka) ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களின் வழக்கறிஞர் ரத்னா சிங் (Ratna Singh) சமூக ஊடகத்தில் இதனைத் தெரிவித்தார்.

இந்தியத் தேர்தல் ஆணையருக்கு எதிரான பெரிய அளவிலான ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக மூவரும் நேற்று தடுத்து வைக்கப்பட்டனர்.

வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு எதிராக அந்த இயக்கம் ஆர்ப்பாட்டம் செய்கிறது.

வாக்காளர் பட்டியல் மாற்றங்கள் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சிக்குச் சாதகமாக இருப்பதாக எதிர்த்தரப்புகள் குறைகூறுகின்றன.

ஆர்ப்பாட்டங்களைத் தடுக்க டில்லி முழுவதும் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்தியாவில் SIR எனும் வாக்காளர் பட்டியல் சீரமைப்பு நடைபெற்று வருகிறது.

வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பதால், தவறுகள் இல்லாத மிகத் துல்லியமான வாக்காளர் பட்டியல் தயாராகிறது.

யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதே நோக்கம் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் கூறுகிறது.

போலிப் பதிவுகள் நீக்கப்படுகின்றன. இறந்தவர்களின் பெயர்கள் அகற்றப்படுகின்றன. ஒரே நபர் இரண்டு இடங்களில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டால் அதுவும் நீக்கப்படுகிறது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்