Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

குறைந்தது 2 ஆண்டுகள் தேவைக்கும் அதிகமான சர்க்கரையை உற்பத்தி செய்யவிருக்கும் இந்தியா

வாசிப்புநேரம் -
இந்தியா குறைந்தது 2 ஆண்டுகள் தேவைக்கும் அதிகமான சர்க்கரையை உற்பத்தி செய்யவிருக்கிறது.

கரும்பு பயிரிடும் இடத்தை மில்லியன் கணக்கான விவசாயிகள் விரிவுபடுத்தவுள்ளனர்.

நல்ல மழைப்பொழிவினால் அறுவடை சிறப்பாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறினர்.

எனவே இவ்வாண்டும் அடுத்த ஆண்டும் உற்பத்தி அதிகரிக்கும் என்று கூறப்பட்டது.

உலகின் இரண்டாம் ஆகப் பெரிய சர்க்கரை உற்பத்தி நாடு இந்தியா.

முன்னதாக மழைப்பொழிவு சிறப்பாக இல்லாத காரணத்தால் கரும்பு அறுவடை பாதிக்கப்பட்டிருந்தது. 2 ஆண்டுகளுக்கு ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

மே மாதம் கனத்த மழை பெய்தது. அது தொடரும் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.

அதனால் விவசாயிகள் வழக்கத்தைவிட அதிகமான கரும்பைப் பயிரிடவுள்ளனர்.
 
ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்