Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் விசாவை நீட்டித்த இந்தியா

வாசிப்புநேரம் -
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் விசாவை நீட்டித்த இந்தியா

(கோப்புப் படம்: AFP)

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் (Sheikh Hasina) விசாவை இந்தியா நீட்டித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

திருவாட்டி ஹசீனாவைத் திருப்பியனுப்ப வேண்டும் என்று பங்களாதேஷ் வலியுறுத்தும் வேளையில் அவருடைய விசா நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.

திருவாட்டி ஹசீனா இந்தியாவில் தங்கியிருக்க ஏதுவாக அவருடைய விசா நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவை கூறின.

சென்ற ஆண்டு (2024) பங்களாதேஷில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நாட்டிலிருந்து வெளியேறிய திருவாட்டி ஹசீனா தற்போது இந்தியாவில் வசிக்கிறார்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்