Skip to main content
"மீண்டும் மீண்டுமா?"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"மீண்டும் மீண்டுமா?" - ஏர் இந்தியா சர்ச்சை

வாசிப்புநேரம் -
"மீண்டும் மீண்டுமா?" - ஏர் இந்தியா சர்ச்சை

(கோப்புப் படம் : Reuters/ Amit Dave)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் ஒன்று முறையான பாதுகாப்புத் தரநிலைச் சான்றிதழ் இல்லாமல் 8 முறை இயங்கியுள்ளது.

இந்திய விமானத்துறைக் கட்டமைப்பு அது குறித்து விசாரணை நடத்துகிறது.

ஆண்டுதோறும் பாதுகாப்பை உறுதிசெய்து வழங்கப்படும் சான்றிதழ் இல்லாமல் விமானம் இயக்கப்பட்டுள்ளது.

அது எந்த விமானம் என்று சொல்லப்படவில்லை.

என்றாலும் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையின் தலைப்பில் ஏர்பஸ் (Airbus) A320 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த விவகாரத்துடன் நேரடித் தொடர்பில் உள்ள ஒருவர் பயணிகள் நடமாட ஒரே பாதை மட்டுமே கொண்ட குறுகலான விமானம் அது என்று கூறியுள்ளார்.

ஏர்பஸ் நிறுவனம் இதுவரை அது குறித்துக் கருத்துரைக்கவில்லை.

இந்த ஆண்டு பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து இந்தியாவின் விமானத்துறை ஏர் இந்தியா நிறுவனத்தைப் பலமுறை எச்சரித்துள்ளது.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்