Skip to main content
ஜார்க்கண்ட்டில் மாணவர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் - காவல்துறை மோதல்

வாசிப்புநேரம் -
ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் - காவல்துறை மோதல்

(கோப்புப் படம்: AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கப் பணிக்கான நியமனத் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறிப் போராடும் மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் மூண்டது.

ஜார்க்கண்ட் மாநிலச் சட்டமன்றத்தை நோக்கி ஆயிரக்கணக்கான மாணவர்கள் அணிவகுத்தனர்.

அவர்களைக் கலைக்கக் காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்துக் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தினர்.

பொதுத்துறைக்கான தேர்வில் முறைகேடுகள் குறித்து விசாரிக்கும்படி வலியுறுத்தி மாணவர்கள் சில வாரங்களாகப் போராட்டம் நடத்துகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா, ஆர்ப்பாட்டத்தில் படைபலம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதை நிராகரித்தது.

மாநிலத்தை ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா (Jharkhand Mukti Morcha) கட்சி மீதான நெருக்கடியையும் அது அதிகரித்துள்ளது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்