திரும்பியது மோட்டார் சைக்கிள்... கவிழ்ந்தது சுற்றுலாப் பேருந்து
வாசிப்புநேரம் -
(காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: X/Vishii14)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் சுற்றுலாப் பேருந்து ஒன்று பெட்ரோல் நிலையத்திற்கு அருகில் மோதிக் கவிழ்ந்தது.
20 பயணிகள் காயமடைந்தனர்.
பேருந்தில் 35 பயணிகள் இருந்தனர்.
கூத்தாட்டுக்குளம் (Koothattukulam) என்ற சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தது.
அதன் பக்கத்தில் ஒரு மோட்டார் சைக்கிளும் சென்றுகொண்டிருந்தது.
அப்போது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சமிக்ஞை எதுவும் காட்டாமல் திடீரென வலதுப் பக்கமாகத் திரும்பினார்.
மோட்டார் சைக்கிளைத் தவிர்க்கப் பேருந்து ஓட்டுநர் வலதுபுறமாகப் பேருந்தைச் சட்டென்று திருப்ப வேண்டிய நிலை.
பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது.
பெட்ரோல் நிலையத்திற்கு அருகில் இருந்த தூண் ஒன்றில் மோதிக் கவிழ்ந்தது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிர் தப்பினார்.
மற்றோரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நூலிழையில் உயிர் தப்பினார்.
சம்பவத்தைக் கண்காணிப்புக் கேமரா பதிவு செய்தது.
உள்ளூர் வாசிகளும் மீட்புப் பணியாளர்களும் உடனடியாகப் பேருந்தில் சிக்கிய பயணிகளை வெளியேற்ற உதவினர்.
பேருந்து பெட்ரோல் நிலையத்தினுள் மோதியிருந்தால் பெரிய தீச்சம்பவம் ஏற்பட்டிருக்கும் என்று Times of India செய்தித்தளம் சொன்னது.

ஆதாரம் : Others