இந்தியாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கியுள்ள சிலர்

(கோப்புப் படம்)
இந்தியாவின் அசாம் (Assam) மாநிலத்தில் சிலர் சுரங்கத்தில் சிக்கியுள்ளனர்.
உம்ரங்ஷு வட்டாரத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் சிலர் வேலை செய்துகொண்டிருந்தபோது அதில் வெள்ளம் நிரம்பியதாக அதிகாரிகள் கூறினர்.
குறைந்தது 27 ஊழியர்கள் சுரங்கத்தில் இருந்தனர். அவர்களில் பலர் வெளியேறிவிட்டதாகக் கூறப்பட்டது.
சுரங்கத்தில் தற்போது எத்தனைப் பேர் சிக்கியுள்ளனர் என்பது தெரியவில்லை. 4 முதல் 6 ஊழியர்கள் வரை சுரங்கத்தில் இருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
காட்டு வழியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தை எளிதில் அணுகமுடியாது.
சிக்கியுள்ளவர்களைக் காப்பாற்ற மீட்புக்குழு ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.