Skip to main content
இந்தியாவில் கன மழை, வெள்ளம், நிலச்சரிவு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தியாவில் கன மழை, வெள்ளம், நிலச்சரிவு - 100 பேர் பலி

வாசிப்புநேரம் -
இந்தியாவில் கன மழை, வெள்ளம், நிலச்சரிவு - 100 பேர் பலி

(படம்: Biju BORO / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தியாவில் மழையால் நேர்ந்த வெள்ளம், நிலச்சரிவில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

பல்லாயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

மழையால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று அஸ்ஸாம்.

அங்கு சுமார் 87 பேர் மாண்டதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமாண்டா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

அஸ்ஸாமில் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்ட சிவசாகர் பகுதியில் கிட்டத்தட்ட 47 பேர் மாண்டனர்.

அங்கு சில பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியவில்லை.

மாநில அதிகாரிகள் நிவாரணப் பணிகளில் உதவப் பொதுமக்களிடம் நன்கொடை கேட்டுள்ளனர்.

இதுவரை காணாத அளவு சேதம் ஏற்பட்டுள்ளதாகத் திரு சர்மா குறிப்பிட்டார்.

கேரளாவில் பெய்த கனத்த மழையில் 15 பேர் மாண்டனர்.

7 பேரைக் காணவில்லை.

அங்கு அமைக்கப்பட்டுள்ள 300க்கும் அதிகமான நிவாரண முகாம்களில் ஏறத்தாழ 10,000 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 31 பேர் உயிரிழந்ததாக அம்மாநில ஊடகம் தெரிவித்தது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்