Skip to main content
மகள்களின் கல்விக்காக வெறுங்காலுடன் ஓடிய தாய்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

மகள்களின் கல்விக்காக வெறுங்காலுடன் ஓடிய தாய்

வாசிப்புநேரம் -
மகள்களின் கல்விக்காக வெறுங்காலுடன் ஓடிய தாய்

(படம்: X / @MandeepRajBhar9)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 02 Sep 2026 03:04PM புதுப்பிப்பு : 02 Sep 2026 03:24PM
ஓடுவதற்கென்று ஒரு தகுந்த காலணியில்லை...

ஆனால் ஓர் இலக்கு இருந்தது.

தமது மகள்களின் கல்விக்கு எப்படியாவது பணம் சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன்...

நெடுந்தொலைவு ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டார் 47 வயது ரமாபாய் ரான்வீர் (Ramabai Ranveer).

வியக்க வைக்கும் இந்தச் சம்பவம் இந்தியாவின் மஹாராஸ்டிரா மாநிலத்தில் இடம்பெற்றது.

சேலை அணிந்துகொண்டு, செருப்புடன் ஓடத் தொடங்கினார் ரமாபாய்.

வெற்றி பெற்றால் 3,000 ரூபாய் (40 வெள்ளி) பரிசுத்தொகை.

ஆனால் அவரது கண்களில் அது வெறும் பரிசு மட்டுமல்ல, மகள்களின் எதிர்காலம்.

கல்விக் கட்டணத்திற்கு, புத்தகங்களுக்கு என அந்தத் தொகை அவரது மகள்களின் கல்விப் பாதைக்குச் சிறிதளவாவது உதவும் என்ற குறிக்கோளுடன் ஓடினார்.

அவர் கணவர் இறந்த பிறகு, மகள்களை வளர்க்கும் முழுப்பொறுப்பை ரமாபாய் ஏற்றுக்கொண்டார்.

மகள்கள் நல்ல கல்வியைப் பெற வேண்டும் என்பதை அவர் தலையாயக் கடமையாக கருதினார்.

அவரை விட வயது குறைந்த பல இளம் போட்டியாளர்களும் போட்டியில் கலந்துகொண்டனர்.

அவர்கள் அனைவரும் ஓட்டப் பந்தயத்திற்கென தகுந்த உடை, காலணியை அணிந்திருந்தனர்.

வழுக்கும், சேறு படிந்த சாலைகளில் செருப்புடன் ஓடுவது எப்படி?

செருப்பை ஒருபுறம் வீசிவிட்டு ஓடினார், வெற்றி பெறவேண்டும் என்ற ஒற்றை எண்ணத்துடன்.

முதல் பரிசை வென்றார்.

அவர் வெறுங்காலுடன் சாலையில் ஓடும் காட்சி இணையத்தில் பரவலானது.

"இதுதான் தாய்ப் பாசம்," என்று இணையவாசிகள் உருகுகின்றனர்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்