Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தியாவில் திறன்பேசிகளில் அரசாங்கப் பாதுகாப்புச் செயலி கட்டாயம்

வாசிப்புநேரம் -
இந்தியாவில் திறன்பேசிகளில் அரசாங்கப் பாதுகாப்புச் செயலி கட்டாயம்
(படம்: Sajjad HUSSAIN / AFP)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தியாவில் திறன்பேசிகளில் அரசாங்க இணையப் பாதுகாப்புச் செயலியைக் கட்டாயம் பதிவிறக்கம் செய்யவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

"Sanchar Saathi" எனும் அந்தச் செயலியைத் திறன்பேசியிலிருந்து நீக்க முடியாது.

மக்களை மோசடிகளிலிருந்து பாதுகாக்க அது உதவும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

புதிய விதிமுறைகளைச் செயல்படுத்த திறன்பேசித் தயாரிப்பாளர்களுக்கு 90 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் அல்லது பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்படும் அனைத்துத் திறன்பேசிகளிலும் அந்தச் செயலி இருக்கவேண்டும் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தது.

காணாமல்போன அல்லது திருடப்பட்ட திறன்பேசிகளை அந்தச் செயலி மூலம் கண்டுபிடிக்கலாம் என்று அது சொன்னது.

எனினும் இந்திய அரசாங்கத்தின் புதிய விதிமுறை தனிநபர் அந்தரங்கத்தை மீறுவதாகக் குறைகூறல்கள் எழுந்துள்ளன.

அரசாங்கம் தனிநபர் சாதனங்களை அதன் கட்டுக்குள் கொண்டுவர முயல்வதாகச் சிலர் அக்கறை தெரிவித்தனர்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்