இந்தியா- பாகிஸ்தான் தாக்குதல்கள் தொடர்கின்றன?
AP/Rajanish Kakade
This audio is generated by an AI tool.
இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையை நிறுத்துவதற்கு இணங்கிய பிறகும் தாக்குதல்கள் தொடர்வதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறியதாக ஒன்று மற்றொன்றைக் குற்றஞ்சாட்டுகின்றன.
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு, காஷ்மீர் பகுதிகளில் ஆகாயத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
தாக்குதல் மீண்டும் நடத்தப்பட்டால் அதற்கு ஏற்ற பதிலடி இருக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சு சொன்னது.
உடன்பாட்டுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாகப் பாகிஸ்தான் கூறியது.
நான்கு நாளாக நடந்த மோதல் இருபது ஆண்டில் இருநாட்டுக்கும் இடையே நடந்த ஆக மோசமான சண்டையாகக் கருதப்படுகிறது.
கடந்த மாதம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் சுற்றுப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 26 பேர் மாண்டனர்.
அதனைத் தொடர்ந்து பதற்றம் மூண்டது.