Skip to main content
"இந்தியா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"இந்தியா - பாகிஸ்தான் சண்டையில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன"

வாசிப்புநேரம் -
"இந்தியா - பாகிஸ்தான் சண்டையில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன"

(படம்: CHIP SOMODEVILLA / GETTY IMAGES NORTH AMERICA / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்த ஆண்டு (2025) ஏப்ரலில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த சண்டையின்போது 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) கூறியிருக்கிறார்.

குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வெள்ளை மாளிகையில் நடத்தப்பட்ட விருந்து நிகழ்ச்சியில் திரு டிரம்ப் அந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

எந்த நாட்டின் போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்பதை அவர் குறிப்பிடவில்லை. கூடுதல் விவரங்களும் வழங்கவில்லை.

ஏப்ரல் 22ஆம் தேதி இந்தியா வசம் உள்ள காஷ்மீரில் நடந்த தாக்குதலில்  26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையே சண்டை மூண்டது. 

சண்டையில் 5 இந்தியப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகப் பாகிஸ்தான் கூறியிருந்தது.

பாகிஸ்தானின் சில போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக இந்தியாவும் குறிப்பிட்டது.

ஆனால் பாகிஸ்தான் அதை மறுத்தது.

மே 10ஆம் தேதி சண்டையை நிறுத்த இருதரப்பும் இணங்கின.

சண்டை நிறுத்தத்திற்கு தாம் உதவியதாகத் திரு டிரம்ப் அடிக்கடி கூறியிருக்கிறார்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்