Skip to main content
இந்தியா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தியா - பாகிஸ்தான் எல்லைச் சம்பவம் : விளக்கம் கேட்டு இரு நாட்டுத் தூதர்களுக்கு அழைப்பு

வாசிப்புநேரம் -
இந்தியா - பாகிஸ்தான் எல்லைச் சம்பவம் : விளக்கம் கேட்டு இரு நாட்டுத் தூதர்களுக்கு அழைப்பு

கோப்புப் படம்: AFP/Narinder Nanu

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 04 Oct 2026 10:52AM புதுப்பிப்பு : 04 Oct 2026 01:48PM
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நடந்த பாதுகாப்புச் சம்பவத்துக்குப் பிறகு இரு நாடுகளும் விளக்கம்கேட்டு ஒன்று மற்றொன்றின் தூதரை அழைத்துள்ளன.

சம்பவம் நேற்று நடந்தது.

ஆயுதமேந்தாத பாகிஸ்தானியர்கள் இருவரை இந்திய ராணுவ வீரர்கள் கொன்றதாகப் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியது.

அந்தக் குற்றச்சாட்டை மறுத்த இந்தியா, சம்பந்தப்பட்ட இருவரும் சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க முயன்றதாகச் சொன்னது.

மாண்ட இருவரையும் ஊடுருவல்காரர்கள் என்று இந்தியா கூறியதற்குப் பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது.

இந்தியத் தூதரை அழைத்த பாகிஸ்தான் சம்பவத்தை இந்தியா விசாரிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.

பதிலுக்கு இந்தியா, பாகிஸ்தான் தூதரை அழைத்துச் சட்ட விரோத ஊடுருவலைப் பாகிஸ்தான் தடுக்க வேண்டும் என்று கூறியது.

மூவர் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்றதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. பாகிஸ்தானுக்குத் திரும்பும்படி இந்திய எல்லைப் பாதுகாப்புப் பிரிவு உத்தரவிட்ட பிறகும் அவர்கள் எல்லையைக் கடக்க முயன்றதாக இந்தியா சொன்னது.

அதனால் அவர்களை அபாயமாகக் கருதவேண்டியிருந்ததாக இந்தியா விளக்கியது.
 
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்