பெட்ரோல் நிலையத்தில் குழாய் அடித்து ஆடவர் மரணம்
வாசிப்புநேரம் -
(படம்: MARKO PERKOV / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இந்தியாவில் பெட்ரோல் நிலையத்தில் நேர்ந்த விபத்தில் 24 வயது ஊழியர் மாண்டார்.
காரில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தபோது அந்த எரிபொருள் குழாய் காரிலிருந்து கழன்று ஊழியரின் தலையில் அடித்தது.
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜம்ஷட்பூர் நகரில் அந்தச் சம்பவம் நடந்தது.
சம்பவம் கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.
அந்த இடத்திலிருந்து மக்கள் பதறி அடித்துக்கொண்டு ஓடுவது காணொளியில் தெரிகிறது.
எரிவாயுக் கசிவும் ஏற்பட்டது.
அந்த ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவர் காயத்தால் உயிரிழந்தார்.
எதனால் எரிபொருள் குழாய் கழன்றது என்பது தெரியவில்லை.
அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

ஆதாரம் : CNA