இந்தியாவின் பெரிய கோயில்களில் நிதி எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது? - எழும் கேள்விகள்...
வாசிப்புநேரம் -
படம்: INDIAN PRESS INFORMATION BUREAU (PIB) / AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இந்தியாவின் அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் வழங்கிய நன்கொடைகள் முறைகேடாகக் கையாடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் நன்கொடைகளை நிர்வகித்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 30 மில்லியன் ரூபாய் (402,204 வெள்ளி) கையாடப்பட்டிருக்கலாம் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தவில்லை.
2024ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ராமர் கோயிலுக்கு, நாள்தோறும் சுமார் 90,000 பக்தர்கள் செல்கின்றனர்.
அவர்கள் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட காணிக்கைகளை வழங்குகின்றனர்.
இந்தச் சம்பவம் இந்தியாவின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் நன்கொடைகள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்பது குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
நிதி வெளிப்படைத்தன்மையும் பொறுப்பேற்றுக்கொள்வதும் இல்லாததே முக்கியப் பிரச்சினை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நன்கொடைகளைக் கணக்கிடும் நடைமுறைகள், கேமரா வழி கண்காணிப்பு போன்றவை வலுப்படுத்தப்படவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவின் பெரிய கோயில்களில் நிதி நிர்வாகத்துக்குக் கடுமையான கண்காணிப்பு அவசியம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : AFP