ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து இந்தியா சென்ற எண்ணெய்க் கப்பல்
வாசிப்புநேரம் -
மத்திய கிழக்குப் பூசல் தொடங்கிய பிறகு, முதன்முறை ஒரு கச்சா எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்றுள்ளது.
இம்மாதத் தொடக்கத்தில் சவுதி அரேபியாவின் கிழக்கு மாநிலத்தில் உள்ள ராஸ் தனூரா (Ras Tanura) நகரில் 135,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்றப்பட்டது.
லைபீரியாவில் பதிவு செய்யப்பட்ட ஷென்லொங் (Shenlong) எனும் அந்தக் கப்பல், இந்திய மாலுமி தலைமையில் நேற்று மாலை பாதுகாப்பாய் மும்பை துறைமுகத்தை சென்றடைந்தது.
உலகின் எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 விழுக்காடு ஹோர்முஸ் நீரிணைவழி நடைபெறுகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு நீரிணையில் கப்பல்களை அனுமதிக்கப் போவதில்லை என்று ஈரான் எச்சரித்தது. அதனால் ஹோர்முஸ் நீரிணையில் செயல்பாடுகள் நிலைகுத்திப்போயின.
பல்வேறு சவால்களைக் கடந்து கப்பல் இந்தியத் துறைமுகம் சென்றடைந்திருப்பதால் நீரிணை மீண்டும் கப்பல் போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆதாரம் : Others