Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சங்கர் மகாதேவனுக்கு அமெரிக்காவின் Grammy விருது

வாசிப்புநேரம் -
சங்கர் மகாதேவனுக்கு அமெரிக்காவின் Grammy விருது

Instagram/ARR

இந்தியாவின் புகழ்பெற்ற கலைஞர்களுக்குப் பெருமை!

சங்கர் மகாதேவன், ஸாகீர் ஹூசைன், கணேஷ் ராஜகோபாலன் ஆகியோர் Grammy விருதைப் பெற்றுள்ளனர்.

66ஆவது கிராமி விருது விழாவில் அவர்களின் 'சக்தி' இசைக் குழு வெற்றிபெற்றுள்ளது.

சிறந்த அனைத்துலக இசைத் தொகுப்புக்காக அவர்கள் விருது பெற்றனர்.

அவர்கள் சென்ற ஆண்டு (2023) வெளியிட்ட இந்தக் கணம் ('This Moment’) எனும் இசைத் தொகுப்பில் மொத்தம் 8 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

"அனைவருக்கும் நன்றி. எனது மனைவிக்கு இந்த விருதை அர்ப்பணிக்க விரும்புகிறேன்," என்று சங்கர் மகாதேவன் சொன்னார்.

பிரபல இசையமைப்பாளர் A.R ரஹ்மான் (A.R Rahman) வெற்றிபெற்ற இசைக் கலைஞர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

கிராமி விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) நகரில் நடைபெற்றது.

கிராமி விருது விழா ஆண்டுதோறும் சிறந்த இசைக் கலைஞர்களைக் கௌரவிக்கிறது.

இசை உலகில் கிராமி மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்