Skip to main content
52 முறை மன்னிப்புக் கேட்ட மாணவர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

52 முறை மன்னிப்புக் கேட்ட மாணவர் - மாடியிலிருந்து குதித்தார்

வாசிப்புநேரம் -
52 முறை மன்னிப்புக் கேட்ட மாணவர் - மாடியிலிருந்து குதித்தார்

(கோப்புப் படம்: Envato Elements)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் பள்ளியின் 3ஆம் மாடியிலிருந்து குதித்த 13 வயது மாணவர் உயிர் தப்பியிருக்கிறார்.

பள்ளிக்குக் கைத்தொலைபேசி கொண்டு சென்ற மாணவர் வகுப்பறையைக் காணொளியாக எடுத்து சமூக ஊடகத்தில் பதிவேற்றினார்.

அதனைக் கண்டுபிடித்த பள்ளி நிர்வாகம் மாணவரின் பெற்றோரைப் பள்ளிக்கு அழைத்ததாக NDTV ஊடகம் சொன்னது.

பெற்றோர் வருவதற்கு முன்னரே பள்ளித் தலைமையாசிரியர் அறைக்குள் நுழைந்த மாணவர் அங்கு 4 நிமிடம் விடாமல் 52 முறை மன்னிப்புக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் தலைமையாசிரியர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

பள்ளியிலிருந்து மாணவரை நீக்கி தேசிய நிலை ஸ்கேட்டிங் (skating) போட்டிகளில் அவர் பெற்ற பதக்கங்களை மீட்டுக் கொள்ளப்போவதாகத் தலைமையாசிரியர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

அதைக் கேட்ட மாணவர் அறையிலிருந்து வெளியேறி வேகமாக ஓடிச்சென்று 3ஆம் மாடியிலிருந்து கீழே குதித்ததாகத் தெரிகிறது.

அந்த நேரத்தில் மாணவரின் அப்பா பள்ளிக்குச் சென்றிருந்ததாகவும் மகன் கீழே குதித்ததைக் கேள்விப்பட்டதாகவும் NDTV சொன்னது.

கடுமையாகக் காயமுற்ற மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை சீராக உள்ளது.

மாணவர் பள்ளிக்குக் கைத்தொலைபேசியைக் கொண்டு வந்த விவகாரத்தைப் பள்ளி கையாண்ட விதம் குறித்துக் கேள்வி எழுந்துள்ளது.

விசாரணை நடைபெறுகிறது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்