Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரிட்டன் - இந்தியா தடையற்ற வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை தொடக்கம்

வாசிப்புநேரம் -
பிரிட்டன் - இந்தியா தடையற்ற வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை தொடக்கம்

படம்: AFP

பிரிட்டனும் இந்தியாவும் தடையற்ற வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகளை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளன.

பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இருதரப்பு வர்த்தகத்துக்குப் புத்துயிரூட்டும் முயற்சிகளில் அதுவும் ஒன்று.

அந்த உடன்படிக்கை, புதிய வேலைகளை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது.

இருதரப்பு உடன்படிக்கையை, அடுத்த ஓராண்டுக்குள் இறுதிசெய்ய முடியுமென பிரிட்டனும் இந்தியாவும் எதிர்பார்க்கின்றன. 

உடன்படிக்கை மூலம் இருதரப்பு வர்த்தகத்தையும் 2030ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இறுதி உடன்படிக்கை கையெழுத்தாகும் முன்னதாக, அடுத்த சில மாதங்களில் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடங்க இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa