இந்தியப் பயணிகளுக்கு பிரிட்டனில் தனிமைப்படுத்தும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரும் புதுடில்லி
இந்தியப் பயணிகளுக்கு பிரிட்டனில் தனிமைப்படுத்தும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரும் புதுடில்லி

படம்: REUTERS
இந்தியப் பயணிகளுக்கு பிரிட்டனில் தனிமைப்படுத்தும் கட்டுபாடுகளைத் தளர்த்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணி்யம் ஜெய்சங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது பிரிட்டனுக்குச் செல்லும் இந்திய நாட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருந்தாலும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்தியாவின் Covishield தடுப்பு மருந்தை பிரிட்டன் இன்னும் அங்கீகரிக்கவில்லை.
Covishield தடுப்பு மருந்து AstraZeneca நிறுவனத்தின் தாயரிப்பு. AstraZeneca-வின் தடுப்பு மருந்து பிரிட்டனில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. அது பல மில்லியன் மக்களுக்குப் போடப்பட்டுள்ளது.
ஆனால் Covishield தடுப்பு மருந்தை ஏன் பிரிட்டன் நிராகரிக்கிறது என்பது புரியாமல் இந்தியர்கள் தவிக்கின்றனர்.
Covishield விவகாரம் குறித்து இப்போது பிரிட்டனும் இந்தியாவும் பேசிவருகின்றன.
- Reuters