Skip to main content
வங்கியை ஏமாற்றிய இந்திய நகைக்கடை முதலாளி பெல்ஜியத்தில் கைது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வங்கியை ஏமாற்றிய இந்திய நகைக்கடை முதலாளி பெல்ஜியத்தில் கைது

வாசிப்புநேரம் -
இந்திய நகைக்கடை முதலாளி மேஹுல் சோக்சி (Mehul Choksi) இன்று பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டார்.

அவர் இந்தியாவின் ஆகப்பெரிய பஞ்சாப் தேசிய வங்கியிடம் 1.8 பில்லியன் அமெரிக்க டாலரை (2.3 பில்லியன் வெள்ளி) ஏமாற்றியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

வைர வியாபாரியான அவரைத் திரும்ப அனுப்பச் சொல்லி இந்தியா கேட்டு வந்தது.

BBC அந்தத் தகவலை வெளியிட்டது.

2018ஆம் ஆண்டில் திரு சோக்சி இந்தியாவை விட்டு வெளிநாட்டிற்குச் சென்றார்.

இந்தியாவுக்கு அனுப்பிவைக்க முடிவெடுத்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகத் திரு சோக்சியின் வழக்கறிஞர் கூறினார்.

திரு சோக்சி புற்றுநோயால் அவதிப்படுகிறார் என்றும் அவரை இந்தியாவுக்கு அனுப்பிவைப்பது சரியல்ல என்றும் வழக்கறிஞர் கூறினார்.
ஆதாரம் : Others/BBC

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்