இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவனுக்கு அல்பர்ட் ஐன்ஸ்டீனைவிட அதிக IQ

X/Mauli Arora
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிரிஷ் அரோராவுக்கு (Krish Arora) அல்பர்ட் ஐன்ஸ்டீனைவிட அதிக அறிவுக்கூர்மைக் குறியீடு (IQ) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
10 வயது கிரிஷ் அரோராவிற்கு இருக்கும் அறிவுக்கூர்மைக் குறியீட்டின் மதிப்பு 162.
ஒப்புநோக்க அது அல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு 160ஆக இருந்தது.
அந்தக் குறியீடு ஒரு மனிதனின் அறிவுத்திறனை மதிப்பிடுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஓர் அளவுகோல்.
கிரிஷ் அவரது பெற்றோருடன் இங்கிலாந்தின் ஹௌன்ஸ்லோவில் (Hounslow) தங்கியிருப்பதாக Times of India நாளேடு குறிப்பிட்டது.
சதுரங்க விளையாட்டு, கணிதம், பியானோ வாசித்தல் போன்றவற்றிலும் கிரிஷ் சிறந்து விளங்குவதாக அவரது பெற்றோர் கூறினர்.
4 வயதிலேயே அவரால் கடினமான கணிதப் புதிர்களுக்குத் தீர்வு காணமுடிந்ததாகவும் சரளமாகப் படிக்க முடிந்ததாகவும் Times of India நாளேடு தெரிவித்தது.
"சவால்கள் இருந்தாலும்கூட இப்படிப்பட்ட திறமையான பிள்ளையை வளர்ப்பதில் பெருமிதம் கொள்கிறேன்," என்று கிரிஷின் தாயார் சொன்னார்.