ஆர்ப்பாட்டத்துக்குத் தயாராகிறது புதுடில்லி
வாசிப்புநேரம் -
படம்: Sajjad HUSSAIN / AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் தேர்தல் ஆணையத் தலைவர் பதவி விலகக் கோரி எதிர்த்தரப்பினர் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தத் தயாராகின்றனர்.
‘கரப்பான்பூச்சி’ ஜனதாக் கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே (Abhijeet Dipke) உட்பட மூன்று தலைவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சனிக்கிழமை அவர்களின் விமானம் டில்லியில் தரையிறங்கியதும் மூவரும் தடுத்து வைக்கப்பட்டனர்.
மத்திய டில்லியின் ஜந்தர் மந்தரில் (Jantar Mantar) ஆயிரக்கணக்கானோரைத் திரட்ட கரப்பான்பூச்சி திட்டமிட்டது.
மூவரும் இன்று அதிகாலை நீதிபதி முன் நிறுத்தப்பட்டனர்.
ஓராண்டுக்கு அமைதிக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
தடுத்து வைக்கப்பட்ட சமூக ஊடகப் பிரபலம் துருவ் ராத்தியும் (Dhruv Rathee) நள்ளிரவுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.
இனி ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கக்கூடாது என்ற நிபந்தனை அவருக்கு விதிக்கப்பட்டது.
நேற்றைய ஆர்ப்பாட்டத்தைத் தடுக்க 2,000க்கும் மேற்பட்டோரைப் காவல்துறை தடுத்து வைத்தது.
நேற்று இணையச் சேவையும் ரயில் நிலையங்களும் முடக்கப்பட்டன. இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : Reuters