குழந்தைக் கொலை - இந்திய இல்லப் பணிப்பெண்ணுக்கு மரண தண்டனை
வாசிப்புநேரம் -
(envato.com)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஐக்கிய அரபுச் சிற்றரசில் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஷாஸாடி கான் (Shahzadi Khan) என்ற இந்திய இல்லப் பணிப்பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவருக்குக் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக இந்திய அரசாங்கத்தை மேற்கோள்காட்டி BBC செய்தி வெளியிட்டது.
தாம் பராமரித்து வந்த ஆண் குழந்தையை மூச்சுத்திணறச் செய்து கான் கொன்றதாக நீதிமன்ற ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் குழந்தையைச் சவப்பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்படாததால் அந்தத் தகவலை மருத்துவரால் உறுதிப்படுத்த இயலவில்லை.
இந்நிலையில் கான் குற்றமற்றவர் என்றும் அந்த 4 மாதக் குழந்தை தவறான தடுப்பூசியால் மரணமுற்றதாகவும் கானின் குடும்பத்தார் கூறுகின்றனர். வழக்கு விசாரணையில் தம்மைத் தற்காத்துக்கொள்ள கானுக்குப் போதிய வாய்ப்புகள் தரப்படவில்லை என்றும் குடும்பம் கூறியுள்ளது.
இதன் தொடர்பில் ஐக்கிய அரசுச் சிற்றரசு அரசாங்கத்தின் கருத்தைக் கேட்க BBC தொடர்பு கொண்டுள்ளது.
கான் பற்றிய தகவல் வேண்டுமென்று அவரின் குடும்பம் டில்லி உயர்நீதிமன்றத்திடம் மனு போட்ட பிறகுதான் அவரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தியை இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்தியது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கான் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அபு தாபியிலுள்ள (Abu Dhabi) இந்தியக் குடும்பத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
வெளிநாடுகளில் 54 இந்தியர்கள் மரண தண்டனைக்குக் காத்திருப்பதாக இந்திய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. அவர்களில் 29 பேர் பேர் ஐக்கிய அரபுச் சிற்றரசில் இருக்கின்றனர்.

ஆதாரம் : Others