Skip to main content
"அலுத்துப்போய்விட்டது"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

"அலுத்துப்போய்விட்டது" - குப்பை போடும் சக இந்தியர்களைக் கண்டித்த ஆடவர்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

கஸக்ஸ்தானில் (Kazakhstan) அனைத்துலக விமான நிலையத்தில் குப்பை போட்ட சக இந்தியர்களின் செயலைக் கண்டிக்கும் ஆடவரின் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவருகிறது.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் சமூகப் பொறுப்பு குறித்து அந்த ஆடவர் கேள்வி எழுப்பினார்.

சமூக ஊடகத்தில் பலரும் அந்த விவாதத்தில் இறங்கினர்.

சுமித் லகேரா (Sumit Lakhera) காணொளியை Instagramஇல் பகிர்ந்துள்ளார்.

விமான நிலையத்தில் இருக்கைகளின் அருகில் குப்பைகள் சிதறிக் கிடப்பதைக் காட்டும் அவர் இதற்குச் சக இந்தியர்களே காரணம் எனச் சாடுகிறார்.

"சொல்வதற்கு ஒன்றுமில்லை. மிகவும் அலுத்துப்போய்விட்டது" என்று ஹிந்தியில் தமது ஆதங்கத்தை அவர் கொட்டுகிறார்.

எந்த நாட்டுக்குப் போனாலும் சமூகப் பொறுப்போடு நடக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இல்லாவிட்டால் வெளிநாட்டில் பயணம் செய்யும்போது அவமானமாக இருக்கிறது என்று அவர் குமுறினார்.

அவரது விமர்சனத்தைச் சிலர் ஆதரித்தாலும், ஒரு சிலரின் நடத்தையை வைத்து ஒட்டுமொத்த அனைவரையும் எடை போடக்கூடாது என்று வேறு சிலர் கூறினர்.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்