உலகம் trending
இருக்கையை மாற்றச் சொன்னார் விமானத்துக்கு வெளியே போனார்
This audio is generated by an AI tool.
விமானத்தில் இருக்கையை மாற்றிக்கொள்ள மறுத்த சகப் பயணியிடம் தகராறு செய்த ஆடவர் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
சம்பவம் மத்திய கிழக்கு நாடொன்றுக்குச் சொந்தமான விமானத்தில் நடந்தது.
ஆடவர், அந்தச் சகப் பயணியை அணுகி நடைபாதை ஓரமிருந்த இருக்கையிலிருந்து நடுவரிசை இருக்கைக்கு மாறச் சொல்லியிருக்கிறார். தமது சகோதரருடன் அமர வேண்டும் என ஆடவர் கூறியிருக்கிறார்.
சகப் பயணி மறுத்துவிட்டார்.
ஆடவர் அவரை விடவில்லை.
விமானப் பணிப்பெண்ணிடம் சென்று இருக்கையை மாற்றக் கோரி வற்புறுத்தத் தொடங்கினார். அவரது முயற்சி பலிக்கவில்லை.
விமானப் பணியாளரைத் தொடர்ந்து நச்சரித்த அந்த ஆடவர் விமானத்திலிருந்து வெளியே அழைத்துச்செல்லப்பட்டார்.
சிறிது நேரத்துக்குப் பிறகு அவர் உள்ளே அழைத்து வரப்பட்டார்.
அதன் பிறகு அவர் எதுவும் பேசவில்லை என்று சகப் பயணி சொன்னார்.
இந்தச் சம்பவம் குறித்துப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
குழந்தைகளுடன் அமர விரும்பிய தாய்க்காக மட்டும் தாம் ஒருமுறை இருக்கையை மாற்றிக்கொடுத்ததாக ஒருவர் கூறினார்.
விமானத்தில் வேண்டிய இருக்கையில் அமர வேண்டுமென்றால் அதனை முன்பதிவு செய்வது நல்லது என்று இன்னும் சிலர் கருத்து கூறினர்.