Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தியக் கடலோடிகள் மாண்ட விவகாரம்: "ஒரு நட்பு நாடு இப்படி நடந்து கொள்ளலாமா?"

வாசிப்புநேரம் -
இந்தியக் கடலோடிகள் மாண்ட விவகாரம்: "ஒரு நட்பு நாடு இப்படி நடந்து கொள்ளலாமா?"

படம்: X/CENTCOM

வெளியீடு : 14 Jun 2026 05:33PM புதுப்பிப்பு : 14 Jun 2026 06:44PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஈரானிடமிருந்து சட்டவிரோதமாக எண்ணெய் எடுத்துச் செல்லும் கப்பல்களை அனுமதிக்க முடியாது என்று அமெரிக்கா இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க ராணுவம் அண்மையில் வளைகுடா வட்டாரத்தில் நடத்திய தாக்குதலில் மூன்று இந்தியக் கடலோடிகள் மாண்டனர்.

இந்திய வெளியுறவு அமைச்சர் S. ஜெய்ஷங்கர் (S. Jaishankar) அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோவிடம் (Marco Rubio) தொலைபேசி மூலம் இந்தியாவின் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்ததாகக் கூறினார்.

அமெரிக்க முற்றுகையை மீறி, இந்தியா சட்டவிரோதமாக ஈரானிடம் எண்ணெய் வாங்குவதைச் சகித்துக் கொள்ள முடியாது என்றார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்.

அமெரிக்கா வருத்தமோ இரங்கலோ தெரிவிக்காதது அதிர்ச்சி தருவதாக இந்திய வெளியுறவுத் துறை மீதான நாடாளுமன்றக் குழுவின் தலைவர் சஷி தரூர் (Shashi Tharoor)கூறியிருக்கிறார்.

"ஒரு நட்பு நாடு எப்படி இப்படி நடந்து கொள்ளலாம்?" என்று அவர் கேட்டார்.

ஒரு வர்த்தகக் கப்பலை ஏவுகணையைப் பாய்ச்சிதான் தடுக்க வேண்டுமா? வேறு வகையில் தடுக்க முடியாதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்