உலகம் trending
18 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள்... இலங்கையில் இந்திய நாட்டவர் கைது
வாசிப்புநேரம் -
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: MTV
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இலங்கையில் 454 மில்லியன் இலங்கை ரூபாய் (6.1 மில்லியன் வெள்ளி) மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 46 வயது இந்திய ஆடவர் பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.
பொறியாளரான அவர் அக்டோபர் 28ஆம் தேதி பாரிசிலிருந்து டோஹா வழியாக இலங்கை சென்றார்.
அவரது பயணப்பெட்டியில் சந்தேகத்துக்குரிய பொருள்களைச் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மேலும் சோதனை செய்தபோது சுமார் 5.1 கிலோகிராம் கொக்கெய்ன் (cocaine) போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது.
அதன் மதிப்பு சுமார் 256 மில்லியன் இலங்கை ரூபாய் (984,662 வெள்ளி).
மேலும் சுமார் 13.2 கிலோகிராம் எக்ஸ்டசி (Ecstasy) போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.
அது கிட்டத்தட்ட 23,000 மாத்திரைகளுக்குச் சமம்.
அதன் மதிப்பு சுமார் 198 மில்லியன் இலங்கை ரூபாய் (761,574 வெள்ளி).
ஆரம்பக்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது.
கைதுசெய்யப்பட்ட ஆடவர் இலங்கைக் காவல்துறையின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஆதாரம் : Others