தேர்தல் ஆணையத்துக்கு எதிராக இந்தியாவில் வெடிக்கும் ஆர்ப்பாட்டம் - இளையர்கள் பலர் கைது
வாசிப்புநேரம் -
படம்: REUTERS/Adnan Abidi
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் வாக்காளர் பதிவேட்டில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்தும் இளையர்கள் பலரைக் காவல்துறை தடுத்துவைத்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையாளர் கியானேஷ் குமார் (Gyanesh Kumar) பதவி விலகவேண்டும் என்று இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகின்றனர்.
இளையர்கள் வழிநடத்தும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.
வாக்காளர் பதிவேட்டில் முறைகேடுகளால் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சிக்குத் தேர்தல் சாதகமாக அமைந்ததாய் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
புதுடில்லியில் ஜந்தர் மந்தர் (Jantar Mantar) பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு இந்தியாவில் வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிசெய்யும் நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் தொடங்கியது.
அதனால் மில்லியன் கணக்கானோர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகப் பலர் குறைகூறினர்.
ஆனால் மாண்டவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவுசெய்யப்பட்டவர்கள், வாக்களிக்கத் தகுதியற்றவர்கள் ஆகியோரை அடையாளம் காண்பதற்காகவே நடவடிக்கை எடுத்ததாகத் தேர்தல் ஆணையம் சொன்னது.

ஆதாரம் : Reuters